"ஈரோடு அதிமுகவின் எஃகு கோட்டை, யாராலும் தகர்க்க முடியாது.." - செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் அதிமுகவின் எக்கு கோட்டை, அதனை எவராலும் தகர்க்க முடியாது என்றார். மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத்தேர்தல்களில் கண்ட வெற்றியை போல, இந்த இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
Comments