தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம்..!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக, தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
புதிய ஆளுநர்களை நியமித்தும், இடமாற்றம் செய்தும் குடியரசுத்தலைவர் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள கோயம்புத்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 1998 மற்றும் 99-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டு முறை மக்களைவை உறுப்பினராக இருந்துள்ளார்.
கடந்த 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
Comments