''நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அவசரகால விசா வழங்கப்படும்..'' - ஜெர்மனி அரசு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு, 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்துள்ளது.
இது குறித்து பேசிய ஜெர்மனி உள்துறை அமைச்சர் நான்சி ஃபைசர், தங்கள் நாட்டில் வசிக்கும் துருக்கி அல்லது சிரிய மக்கள் தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மனிக்கு அழைத்துவர அரசு விரும்புவதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம் மற்றும் சிகிச்சை பெற வசதியாக 3 மாத காலங்களுக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
29 லட்சத்துக்கும் அதிகமான துருக்கி வம்சாவளியினர் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர்.
Comments