''பாஜக அரசு திரிபுராவை ஐந்தே ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துள்ளது..'' - பிரதமர் மோடி

காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் திரிபுராவின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளியிருந்த நிலையில், தங்கள் அரசு அம்மாநிலத்தை ஐந்தே ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வருகிற 16ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள திரிபுராவில் பிரதமர் பரப்புரை மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், திரிபுராவில் உள்ள கிராமங்களை இணைக்க 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூர சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அகர்தலாவில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டடுள்ளதாகவும் கூறினார்.
மேலும், ஆப்டிக்கல் பைபர் கேபிள் இணைப்புகள், 4ஜி சேவைகள் கிராமங்களை அடைந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
Comments