பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட 2-ம் உலகப் போரின் வெடிகுண்டு, செயலிழக்கச் செய்யும் போது திடீரென வெடித்தது..!
பிரிட்டரினின் கிரேட் யார்மவுத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது.
கடந்த 7-ம் தேதி யாரே ஆற்றில் தூர்வாரும் பணியின் போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் போது வெடிகுண்டு திடீரென வெடித்ததாகவும், இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
Comments