துருக்கி, சிரியாவில் மீட்புப் பணிகளுக்கு உதவ வான்வழி படங்கள்,தரவுகளை பகிரும் நாசா

0 1480

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் பணிகளுக்கு உதவ அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வான்வழி படங்கள் மற்றும் தரவுகளை பகிர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய நாசா நிர்வாகி பில் நெல்சன், தகவல்களை வழங்க வல்லுநர்கள் குழு கடுமையாக உழைத்து வருவதாக தெரிவித்தார்.

நாசா தனது செயற்கை துளை ரேடாரை பயன்படுத்துவதாகவும், இது இரவும் பகலும் அனைத்து வானிலையிலும் பூமியைப் பார்க்க முடியும் எனவும், நிலநடுக்கத்திற்குப் பிறகு நிலம் எவ்வாறு நகர்கிறது மற்றும் கட்டப்பட்ட நிலப்பரப்பு எவ்வாறு மாறுகிறது என்பதை அளவிட இது பயன்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பூமிக் கண்காணிப்பகம் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வக விஞ்ஞானிகள் குழு நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படங்களை சேகரித்து, துருக்கிக்கான சேதம் ப்ராக்ஸி வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments