திருமணத்தை மீறிய உறவு.. அசாம் இளைஞரால் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு..!

0 3034

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே, அசாம் மாநில இளைஞர் அரிவாளால் வெட்டியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அதே மாநிலத்தை சேந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துவர்க்கா பார் - சுமிதா பார் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் குட்லு என்ற  இளைஞருக்கும், சுமிதாபாருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. சுமிதாபார் தனது 2 குழந்தைகளுடன் குட்லு வீட்டிற்கு சென்றதால், கடந்த 7ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த குட்லு 2 குழந்தைகளையும் கொன்றதுடன்,  அபெண்ணையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. சோழவரம் காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து குட்லுவை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments