துருக்கியில் 5 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த கர்ப்பிணி அவரது 7 வயது சிறுமி மீட்பு

0 1197

துருக்கியின் காசியான்டெப் நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் 5 நாட்களாக சிக்கித் தவித்த 6 மாத கர்ப்பிணி பெண்ணையும், அவரது ஏழு வயது மகளையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதே போல, கஹ்ரமன்மாராஸ் நகரில் 110 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரை ஜெர்மனியைச் சேர்ந்த பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

சிரியாவின் இட்லிப் நகரில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு குடும்பத்தினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட போது, அங்கு திரண்டிருந்த மக்கள் "god is great" என கைத்தட்டி ஆரவாரத்துடன் கோஷமிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments