ஜெருசலேமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், 2 பேர் பலி.. அதிவேகமாக காரை ஓட்டி தாக்குதல் நடத்திய இளைஞர் சுட்டுக்கொலை..!

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், குழந்தை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில், இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த இஸ்ரேல் காவல்துறையினர், கூட்டத்தினர் மீது வேண்டுமென்றே காரை மோதி தாக்குதல் நடத்திய அந்த இளைஞரை சுட்டுக் கொன்றனர்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே பதற்றம் அதிகரித்து வருகிறது.
Comments