அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விட்டு வைக்காத வட மாநில தொழிலாளர்கள்...!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளை பிடித்து லோடு ஏற்றுவதற்கு பீகார் மாநிலத்திலிருந்து வட மாநில தொழிலாளர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.
முகவர்கள் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் இவர்களுக்கு நாளொன்றுக்கு 800 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது. இதனால் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments