''சாலையோர சிறு வியாபாரிகளும், வங்கிகளில் கடன் பெற டிஜிட்டல் கடன் சேவை அறிமுகப்படுத்தப்படும்..'' - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..!

யுபிஐ சேவை போல, சாலையோர சிறு வியாபாரிகளும், வங்கிகளில் கடன் பெற வழிவகை செய்யும் டிஜிட்டல் கடன் வழங்கும் சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற டிஜிட்டல் பேமண்ட்ஸ் உத்சவ் நிகழ்ச்சியில், யுபிஐ சேவையில் 18 இந்திய மொழிகளில், குரல் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பேசிய தொழில்நுட்பத்துறை செயலாளர், யுபிஐ சேவை உலகளாவிய சேவையாக மாற வேண்டும் என்ற அடிப்படையில், நேபாளம், சிங்கப்பூர் உட்பட 5 நாடுகளுடன், National Payments Corporation of India இணைந்து செயல்பட தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
Comments