சர்ச்சைக்குரிய மருத்துவ தகவல்களை தெரிவித்த சித்த மருத்துவர் ஷர்மிகா பதிலளிக்க வரும் பிப்.24-ம் தேதி வரை கால அவகாசம்..!

சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ தகவல்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நுங்கு மற்றும் குளோப்ஜாமூன் பேமஸ் சித்த மருத்துவர் ஷர்மிகா, எழுத்துப்பூர்வ பதிலளிக்க வரும் 24ம் தேதி வரை இந்திய மருத்துவ இயக்குனரகம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.
அதன் படி, வெள்ளிக்கிழமை மீண்டும் அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள இயக்குனர் அலுவலகத்தில் ஆஜரான ஷர்மிகா, மீண்டும் அவகாசம் கோரியதால், அவருக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் மருத்துவ குறிப்புகள் தொடர்பான பதிவுகளை வெளியிடவும் ஷர்மிகாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments