''திமுகவினர் தேர்தல் விதிகளை மீறி வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்தாலும் மக்கள் அதிமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள்..'' - ஜெயக்குமார்..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் தேர்தல் விதிகளை மீறி வேட்பாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று ஈரோட்டில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு மக்கள் வருவதை தடுக்க, திமுகவினர் சாமியானா பந்தல் அமைத்து மக்களுக்கு பணம் மற்றும் பிரியாணி கொடுத்ததாகவும், அது குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments