கதாநாயகி பி.கே.ரோஸி பிறந்த நாளையொட்டி அவரை பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரம் வெளியிட்ட கூகுள்..!

மலையாளத் திரைப்படத்தின் முதல் கதாநாயகியான பி.கே.ரோஸியின் 120-வது பிறந்த நாளையொட்டி கூகுள் நிறுவனம் அவரை பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் 1903-ம் ஆண்டு பிறந்த பி.கே.ரோஸி, சிறு வயதிலிருந்தே கலைகளில் ஆர்வம் கொண்டிருந்ததால், 1928-ம் ஆண்டு ஜே.சி.டேனியல் என்பவர் இயக்கிய விகதகுமாரன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
பின்னர் லாரி ஓட்டுநர் ஒருவரை மணந்து தமிழகத்தில் வாழ்ந்துவந்தார். பி.கே.ரோஸிக்கு மரியாதை செலுத்தும் வகையில், கேரளாவில் உள்ள நடிகைகள் சங்கத்திற்கு பி.கே.ரோஸி பிலிம் சொசைட்டி என பெயரிடப்பட்டுள்ளது.
Comments