சென்னை பெரம்பூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 9 கிலோ தங்க நகைகள் கொள்ளை..!

சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவரின் ஜே.எல். நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரத்தால் வெட்டி, கடையில் இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இரண்டு மாடிகள் கொண்ட ஸ்ரீதர் வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை செயல்பட்டு வந்துள்ளதுள்ள நிலையில்,இரவு கடையை பூட்டிவிட்டு அதன் சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துவிட்டு நகைக்கடை ஊழியர் சென்றுள்ளார்.
இன்று காலை 9 மணி அளவில் கடையை திறப்பதற்காக ஸ்ரீதர் வந்தபோது கடையின் கதவு வெல்டிங் இயந்திரங்களால் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது.
மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருக்கும் ஹார்டுடிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதும் தெரியவந்ததுள்ளது.
கொள்ளை குறித்து ஸ்ரீதர் அளித்த புகாரில் பேரில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், கொள்ளையர்களை பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார்.
Comments