ரிட்டயர்டு ரவுடி ஜோக்கரான கதை... அலற விட்ட அஸ்ராகார்க்..! அந்த பயம் இருக்கனும்..!

0 2890

மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரிட்டயர்டு ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் தான் ரவுடி அல்ல ஜோக்கர் என்று வரிச்சியூர் செல்வம் விளக்கமளித்தார்.

மதுரையில் கழுத்து மற்றும் கைகால்களில் கிலோ கணக்கில் நகைகளுடன் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக ரிட்டயர்டு ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பாக விளக்கமளித்தார். நான் அணிந்திருக்கும் நகை என் மகளின் பெயரில் வாங்கியது எனது அப்பாவின் சொத்தில் ஜாலியாக வாழ்கிறேன். நான் ரவுடி அல்ல என்னை ஜோக்கர் என்று சொல்லுங்கள் என்று தெரிவித்தார்.

எனது குடும்பம் திமுக குடும்பம் ஆனால் நான் திமுகவில் இல்லை, பாஜகவில் நான் சேரபோவதில்லை , நகை பணம் இருப்பதால் நடிகைகள் என்னோடு ஒட்டிக்கொள்கிறார்கள், அதனால்  ஜாலியாக இருப்பேன், காயத்ரி ரகுராமை நான் ஒருமுறை தான் பார்த்தேன் ஆனால் அதை திருச்சி சூர்யா தவறாக பதிவிட்டார் நான் பேசியவுடன் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதனை நீக்கம் செய்துவிட்டார் என்று கூறினார் வரிச்சியூர் செல்வம்.

படத்தில் வடிவேலு நானும் ரவுடிதான் என்று சொல்லுவார் ஆனால் நான் ரவுடி இல்லை என்று சொல்லுகிறேன் நான் எனது அப்பா சம்பாதித்த பணத்தை நான் ஜாலியாக சுற்றி அழிக்கிறேன், எனக்கு எல்லாம் ஜாலிதான், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்ற கொள்கையோடு இருக்கிறேன்.

இப்போது பதவியில் உள்ள தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் யாராவது , எதாவது தவறு செய்தால் கால் கையை உடைத்துவிடுவார் என்றார், நான் எங்கு சென்றாலும் என்னிடம் ஆர்வமாக போட்டோ எடுக்கிறார்கள், நான் ரவுடி இல்லை என போடுங்கள் என கைகூப்பி கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments