ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக்கட்டிகளை மீட்டது இந்திய கடற்படை..!

0 2293

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக்கட்டிகளை இந்திய கடற்படையினர் மீட்டனர்.

கடந்த செவ்வாய்கிழமை கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மண்டபம் நோக்கி வந்த பைபர் படகில் இருந்த மண்டபத்தைச் சேர்ந்த 3 பேர், அதிகாரிகளைக் கண்டதும் ஒரு பார்சலை கடலில் தூக்கி வீசியுள்ளனர்.

அவர்களை கைது செய்து விசாரித்ததில், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகளை வீசியதாக தெரிவித்ததன் பேரில், கடலில் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

2ம் நாளாக இன்று இந்திய கடற்படை உதவியுடன், அந்த 3 பேரையும் உடன் அழைத்துச் சென்று கடலில் தேடிய போது, 12 கிலோ தங்கம் இருந்த அந்த பார்சல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட அந்த மூவரிடமும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments