ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் எங்களுக்கு பிரச்சார பீரங்கி.. அவர் பேச ஆரம்பித்தால் தானாக வாக்குகள் வந்து சேரும் - அண்ணாமலை

0 2947

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக ராகுல்காந்தி இருந்தது போல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் பிரச்சார பீரங்கி எனவும், அவர் பேச ஆரம்பித்தால் தானாக வாக்குகள் தங்களுக்கு வந்து சேரும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் சார்பில் 10 லட்சம் மரங்கள் நடும் தொடக்க நிகழ்ச்சி பாலவாக்கம் கடற்கரை அருகே நடைபெற்றது.

இதனை தொடக்கிவைத்து பேசிய அண்ணாமலை, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பயந்து விட்டதால் திமுகவின் மொத்த நிர்வாகிகளையும் ஈரோட்டில் களம் இறக்கியுள்ளதாக விமர்சனம் செய்தார்.

13 வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இலங்கைக்கு செல்வதாகவும், யாழ்ப்பாணத்தில் இந்திய அரசு சார்பில் கட்டப்பட்ட கலாச்சார மைய திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுடன் பங்கேற்க இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments