ஆயில் டேங்க்கை சுத்தம் செய்ய இறங்கிய 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி!

0 2394

 

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், எண்ணெய் தொழிற்சாலையின் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்ய இறங்கிய 7 கூலித்தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு, தலா 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெத்தாபுரம் அருகே கட்டுமானத்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில், ஆயில் டேங்க்கை சுத்தம் செய்ய இறங்கிய 7 தொழிலாளர்கள், எண்ணெய் கசடுகளில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்ககோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், ஆந்திர அரசு சார்பில் தலா 25 லட்சம், தொழிற்சாலை சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments