பாசத்தோடு டீ வாங்கி வருவதாகக்கூறி மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ.5.30 லட்சம் திருட்டு..!

0 12072

மதுரையில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளருக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச்சென்ற ஊழியரை, போலீசார் தேடி வருகின்றனர்.

நேதாஜி சாலையில் டிரான்ஸ்போர்ட் நடத்திவரும் சஞ்சீவ்குமாரிடம், 5 மாதங்களுக்கு முன்பு உறவினர் மூலமாக, டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்தர், ஓட்டுநர் வேலையில் சேர்ந்தார்.

உரிமையாளருடன் நெருக்கமாக பழகி வந்த ஜிதேந்தர், சஞ்சீவ்குமார் வங்கியிலிருந்து எடுத்து வந்து வைத்திருந்த பணத்தை, அபகரிக்க திட்டமிட்டார். இதற்காகவே, அவருக்கு டீ வாங்கி வந்து, அதில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.

டீயை குடித்த சிறிது நேரத்தில் சஞ்சீவ்குமார் மயக்கமடையவே, அங்கிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.

சிறிது நேரத்திற்குப்பின் மயக்கம் தெளிந்து எழுந்த சஞ்சீவ்குமார், பணம் காணாமல் போனது குறித்து கேட்பதற்காக ஜிதேந்தரை தொடர்புக்கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments