முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா 2 கட்ட அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில், அவரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
திருவள்ளுர் மாவட்டம் மோரையில் உள்ள சிறுமி டானியா வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர், அறுவை சிகிச்சைக்கு பின்னர் நலமுடனும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறாயா என நலம் விசாரித்தார்.
அப்போது சிறுமி டானியா இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் படிப்பதாக மகிழ்ச்சியுடன் முதலமைசச்ரிடம் கூறினார்.
சிறுமியுடனான சந்திப்பின் போது முதல்வருடன் அமைச்சர் பொன்முடி,அமைச்சர் நாசர் ஆகியோரும் உடனிருந்தனர்.
Comments