பழனி திருஆவினன்குடி கோயிலில் தகராறு.. தேங்காய், கற்கள் மற்றும் கட்டைகளை வீசித்தாக்கிய பக்தர்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருஆவினன்குடி கோயில் நுழைவாயிலில் மேளம் அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தேங்காய்கள், கற்கள் மற்றும் கட்டைகளை வீசி தாக்கியதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தைப்பூச விழாவையொட்டி பாதயாத்திரையாக வந்த கோயம்புத்தூர் பக்தர்கள் மேளம் அடித்து கொண்டிருந்தபோது, அப்போது, அங்கு சேலம் எடப்பாடியை சேர்ந்த பக்தர்களும் மேளம் அடித்து கொண்டே வந்ததாக கூறப்படுகிறது.
சேலம் பக்தர்களை மேளம் அடிக்கக்கூடாது என தடுத்ததால், இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, கோயம்புத்தூர் பக்தர்களை கோயிலில் இருந்து வெளியேற்றிய சேலம் பக்தர்கள், நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கேட்டை பூட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தாக்குதல் நடத்திய நிலையில், சேலம் பக்தர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments