நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு சென்றடைந்த சீனா மீட்புக்குழு..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு சீனாவில் இருந்து மீட்புக்குழுவினர் சென்றுள்ளனர்.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள துருக்கிக்கு பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. சீனா அனுப்பிய மீட்புக்குழு தெற்கு துருக்கி நகரமான அதானாவுக்கு இன்று சென்றடைந்தது.
துருக்கி அரசு வேண்டுகோளில் பேரில் சென்றுள்ள 82 பேர் கொண்ட மீட்புக்குழுவினருடன், 20 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் 4 மீட்பு நாய்களும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதனிடையே, துருக்கி மலாட்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 50 மணி நேரத்திற்கு பின் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த வளர்ப்பு கிளியை செஞ்சிலுவை சங்கத்தினர் பத்திரமாக மீட்டனர்.
Comments