கருக்கலைப்புக்குத் தடை விதிக்கக்கோரி 40 மாடி கட்டிடத்தில் 'ஸ்பைடர்-மேன்' போல் ஏறிய இளைஞர் கைது..!

அமெரிக்காவில், 22 வயது இளைஞர் ஒருவர், கருக்கலைப்பு அனுமதி சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி பீனிக்ஸ் நகரிலுள்ள 40 மாடி கட்டிடத்தின் சுவரை பிடித்து ஸ்பைடர் மேன் போல் ஏறினார்.
நாற்பதாவது மாடியில் காத்திருந்த போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர்.
தன்னை தானே Pro-life Spiderman என அழைத்துக்கொள்ளும் மெய்சோன் டெஷா, கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை கண்டித்து உயரமான கட்டிடங்களில் ஏறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கடந்தாண்டு, சான் பிரான்சிஸ்கோ, நியூ யார்க் நகரங்களிலுள்ள 1000 அடி உயர கட்டிடங்களில் இதேபோல் ஏறி சாகசம் புரிந்தார்.
Comments