துருக்கி, சிரியாவை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கம்.. 9,500-ஐ தாண்டிய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை!

துருக்கி, சிரியாவை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
இதில், துருக்கியில் 6 ஆயிரத்து 957 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 2 ஆயிரத்து 547 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் 3 மாதம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடும் குளிர் வாட்டிவதைப்பதால், உணவு, போர்வை போன்ற நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்குமாறு மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கிய சடலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Comments