நாகல்கேணியில் காட்மியம் அளவு 15 மடங்கு அதிகம் - WHO

சென்னையின் ஒரு பகுதியில் காட்மியம் அளவு, உலக சுகாதார அமைப்பின் நிர்ணய அளவை விட, 15 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கனரக உலோகங்களின் செறிவு அளவுகளுக்காக சென்னையில் 45 வெவ்வேறு இடங்களில் இருந்து, மழைக்காலத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் நிலத்தடி நீரின் மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பம்மல் பகுதியில் உள்ள நாகல்கேணியில் காட்மியம், பரிந்துரைக்கப்பட்டதை விட 15 மடங்கும், நிக்கல் 7 மடங்கும் அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.
வில்லிவாக்கத்தில் உள்ள வசந்தன் காலனியில் நிக்கல் அளவு 7 மடங்கும், ஈயம் 6 மடங்கும் அதிகமாகவும் இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Comments