காரை ஓட்டிச்சென்றவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் விபத்து..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காரை வேகமாக ஓட்டிச்சென்ற நபருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி, விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த உதய் என்பவர் காரை ஓட்டி சென்றபோது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, மயக்கமடைந்த நிலையில், கார் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த நபர் மீதும், நடந்துச்சென்ற நபர் மீதும் மோதியுள்ளது.
இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். உதய் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். போலீசார் மூவரையும் மீட்டு, விசாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments