நண்பரின் மனைவியை வெட்டிவிட்டு 2 குழந்தைகளையும் கொலை செய்த இளைஞர்..!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே, நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உறவால், நண்பரின் 2 குழந்தைகளை கொன்று, அந்த பெண்ணையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய வடமாநில இளைஞரை பிடிக்க, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பீகாரை சேர்ந்த குட்டுலு என்பவர் ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில், உடன் பணியாற்றும் அஸ்ஸாமை சேர்ந்த துவர்க்கா பாரின் என்பவரின் மனைவி சுமிதா பாருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு பணி முடிந்து துவர்க்கா பார் வீட்டிற்கு வந்தபோது, மனைவியும், குழந்தைகளும் இல்லாததால், அக்கம்பக்கத்தில் விசாரித்ததில், அவர்கள் குட்டுலு வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
அங்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியே பார்த்ததில், வீட்டிற்குள் 2 குழந்தைகளும் தலையில் தாக்கி கொல்லப்பட்டிருப்பதும், மனைவி தலை மற்றும் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதும் தெரியவந்தது.
தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், ஆபத்தான நிலையில் இருந்த சுமிதா பாரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments