பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் உடல் அவரது சொந்த ஊரான கராச்சியில் அடக்கம்..!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் உடல் அவரது சொந்த ஊரான கராச்சியில் அடக்கம் செய்யப்பட்டது.
1999 ராணுவப் புரட்சிக்குப் பின் பாகிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முஷாரப், உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி துபாயில் காலமானார்.
இதையடுத்து அவர் உடல் சிறப்பு விமானம் மூலம் கராச்சி அருகே உள்ள மாலிர் என்ற இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் ராணுவக் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதிகள் மட்டும் இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர்.
Comments