குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

0 5436

துருக்கியில் ஏற்பட்ட கோரமான நிலநடுக்கத்தையடுத்து நில அதிர்வு மண்டலத்தில் வேறு எந்த எந்த பகுதிகள் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, பீகார், அஸ்ஸாம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர்  ஆகிய எட்டு மாநிலங்களும் அதன் முக்கியநகரங்களும் நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதாகவும் அப்பகுதிகளுக்கு மிகப் பெரிய அளவிலான நில நடுக்கம் ஏற்படுதவற்கான ஆபத்தான நிலை இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டெல்லி, என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நில நடுக்க ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் 59 சதவீத நிலப்பரப்பு கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக 2021ல் மக்களவையில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்திருந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments