''தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்'' - பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தில், துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, 2001ஆம் ஆண்டில் நிகழ்ந்த குஜராத் நிலநடுக்கத்தை நினைவுகூர்ந்து உணர்ச்சிவசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டத்தில் பேசிய பிரதமர், பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதாகவும், உதவிப்பொருட்களுடன் இந்திய குழு அந்நாடுகளுக்கு விரைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, பாஜக எம்பிக்கள் அவரவர் தொகுதிகளின் மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறியுமாறு, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
Comments