நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்- அன்புமணி

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ள நிலையில், நாள்தோறும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா பகுதிகளில் ஆயிரத்து 284 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் நாள்தோறும் 500 முதல் 600 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அடுத்த ஒரு வாரத்திற்குள் சம்பா அறுவடை உச்சம் அடைந்து, தினமும் 5 ஆயிரம் மூட்டைகள் வரை வரக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த வாரம் போன்று, வரும் வாரத்தில் மழை பெய்தால், லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி விடும் என்றும், எனவே, விவசாயிகளின் நலன் கருதி, நெல் மூட்டைகளை பாதுகாக்க, உரிய கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் எனவும் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments