வயல் காட்டில் 1 கிலோ ரூ 0, கோயம்பேட்டில் 1 கிலோ ரூ 7, சில்லரைக் கடையில் ரூ 40 ,நீல்கிரிஸில் 1 கிலோ ரூ 78.. முள்ளங்கி விவசாயிகள் கண்ணீர்..!

0 23111

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கிலோ ஒரு ரூபாய்க்கு கேட்பதால் அறுவடை செய்யாமல் வயல்காட்டில் அப்படியே விடப்பட்ட முள்ளங்கியை, விவசாயிக்கு எந்த ஒரு விலையும் கொடுக்காமல், கூலி ஆட்கள் மூலம் மூட்டைகளாக கட்டி அவற்றை லாரிகளில் எடுத்து வந்து விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சும்மா கிடைத்த முள்ளங்கி சில்லறை விற்பனை கடைகளில் 40 ரூபாய்க்கு விற்கப்படும் பின்னனி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூர், போச்சம்பள்ளி, ஜம்புகுட்டப்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்

இங்குள்ள கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். குறைந்த நாளில் அதிகம் லாபம் தரும் கிழங்கு பயிர் என்பதால் விவசாயிகள், முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர்.

அதிக மகசூல் கிடைத்தாலும் முள்ளங்கிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்கின்றனர் விவசாயிகள் முள்ளாவது உடலில் குத்தினால் தான் கண்ணீர் வரும், முள்ளங்கி பயிரிட்ட பாவத்துக்காக விவசாயிகள் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.

முள்ளங்கி அறுவடையில் ஈடுபட்ட விவசாயிகளிடம் 1 கிலோ முள்ளங்கியை 1 ரூபாக்கு விலைக்கு கேட்கும் இடைத்தரகர்கள் மற்றும் வியாபரிகளுக்கு சிலர் முள்ளங்கியை கொடுத்து நஷ்டத்துக்குள்ளானாலும், பெரும்பாலான விவசாயிகள் அருவடை கூலிக்கு கூட கட்டுபடியாகது என்பதால் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் வயல்காட்டில் அப்படியே விட்டு விட்டனர்.

இதை அறிந்த சில வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக முள்ளங்கி தோட்டத்தை சீர்படுத்தி தருவதாக வாங்கி, வியாபாரிகளே கூலியாட்களை வைத்து அறுவடை செய்து மூட்டைகளாக கட்டி சந்தைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்துவருவதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் அங்கிருந்து சென்னை கோயம்பேட்டிற்கு 30 லோடு முள்ளங்கி கொண்டுவரப்பட்டுள்ளது. 30 கிலோ கொண்ட முள்ளங்கி மூடை ஒன்று 200 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.

அதாவது ஒரு கிலோ 7 ரூபாய் ஆகின்றது. இதே முள்ளங்கி சில்லறை காய்கறிகடைகளில் 1 கிலோ 40 முதல் 50 வரை விலை வைத்து விற்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இவர்களுக்கெல்லாம் மேல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நீல்கிரிஸில் ஒருகிலோ 78 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

இரவு பகல் காத்துக்கிடந்து, நீர் பாய்ச்சி, பக்குவமாக பாதுகாத்து பயிரை வளர்த்த விவசாயி உரிய விலையின்று அருவடை செய்யாமல் விடப்பட்ட முள்ளங்கிகள் மக்களின் கைகளுக்கு 40 ரூபாய் முதல் 78 ரூபாய் வரையிலான விலைக்கு செல்கிறது என்றால் மாவட்ட வேளாண்மைய அதிகாரிகள் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்காததே காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments