அதானி தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி - பாஜக எம்பிக்கள் இடையே காரசார விவாதம்..!

அதானி தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி - பாஜக எம்பிக்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
மக்களவையில் பேசிய ராகுல்காந்தி, எப்படி அதானி பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக உள்ளார்? என்றும், அவருக்கும் பிரதமருக்கும் இடையிலான தொடர்பு என்ன? என்றும் தனது நடைபயணத்தின்போது மக்கள் தன்னிடம் கேட்டதாக கூறினார்.
எப்படி அதானியின் சொத்து மதிப்பு கடந்த 8 ஆண்டுகளில் 8 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலராக உயர்ந்தது? என்றும் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மூத்த எம்பியான ராகுல்காந்தி பொறுப்புடன் பேச வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் தரமுடியுமா? என்றும் பதிலடி கொடுத்தார்.
Comments