பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் விபரீதமுடிவு.. விரக்தியில் தாய் தீக்குளித்து உயிரிழப்பு ..!

சென்னை மாதவரத்தில், மகன், தான் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்து, அதை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால், விரக்தியில் தாய் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிங்கபுரம் பகுதியை சேர்ந்த கர்ணா-செல்வி தம்பதியின் மகன் தேவேந்திரன், ஊரப்பாக்கத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்ட தேவேந்திரன், கடந்த வாரம் அலுவலகத்தில் இருந்து 3 லட்ச ரூபாயை கையாடல் செய்து, அதை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததாக கூறப்படுகிறது.
நிறுவனம் சார்பில் ஊரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேவேந்திரனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டதாகவும், நேற்று இரண்டு லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மீதம் ஒரு லட்சம் ரூபாயை இன்றைக்குள் வழங்க கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தேவேந்திரன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
Comments