கட்டட இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு.. நிலநடுக்கத்தில் இதுவரை 1600 பேர் பலி..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் ஜிண்டரைஸில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய இளம் பெண் மற்றும் சிறுவனை மீட்கும் காட்சி வெளியாகி உள்ளது.
ஜிண்டைரஸில் கட்டட இடிபாடுகளில் தூசி மற்றும் குப்பைகளால் மூடப்பட்டிருந்த இளம்பெண் நூரை வெள்ளை ஹெல்மட் மீட்பு படையினர் மீட்டனர்.
அதேபோல் ஜாந்தாரிஸ் நகரிலும் கட்டட கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கிய சிறுவனையும் மீட்புபடையினர் மீட்டனர்.
இந்நிலையில் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புபணியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments