போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் தொடரும் வாகன விபத்துகள்.. பத்து நாட்களில் 3 விபத்து..

0 1474

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் வாகன விபத்துகள் தொடரும் நிலையில், கடந்த பத்து நாட்களில் ஏற்பட்ட 3 விபத்து காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருப்பத்தூர் - தருமபுரி நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

பர்கூர் சிப்காட் வளாகத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் இச்சாலையை பயன்படுத்திவரும் நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் அதிவேகமாக பயணிக்கும்போது விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் வேகத்தடை அல்லது ரவுண்டானா அமைத்துக் கொடுக்கும்படி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments