பாலைவன பூமியில் களை கட்டும் கீரை விவசாயம்.. 9 மாடி செங்குத்து தோட்டத்தில் கீரை சாகுபடி..!

ஐக்கிய அரபு அமீரகத்தில், பரந்து விரிந்த பாலைவனத்திற்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள விவசாய பண்ணையில் அதிநவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மூலம் விதவிதமான கீரைகள் சாகுபடி செய்யப்படுகிறது.
ஷார்ஜாவில், 26 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த 9 மாடி செங்குத்து தோட்டத்தில், LED ஒளி மூலம் வெப்பமூட்டப்பட்டும், சத்தான உரங்கள் இடப்பட்டும், ஆண்டு முழுவதும் கீரை விவசாயம் நடைபெற்றுவருகிறது.
27 நாட்களுக்கு ஒரு முறை கீரை அறுவடை செய்யப்படுவதாகவும், வழக்காமன விவசாயத்தை விட இரட்டிப்பு மகசூல் கிட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் மற்றொரு பண்ணையில், பசுமைக்குடில் அமைத்து, பலைவன மணலில் 60 வகை கனிகளும், காய்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
Comments