சிரியா சிறையில் கலவரத்தை பயன்படுத்தி 20 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பியோட்டம்.?

சிரியாவில் நிலநடுக்கம் உணரப்பட்ட போது, சிறையில் இருந்து 20 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லையோர நகரமான ராஜோவில் உள்ள சிறையில் 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட போது சிறையின் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள் சேதமடைந்துள்ளன.
அந்த பதற்றமான சூழலில் சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் 20 பேர் வரை தப்பியோடியதாக கூறப்படுகிறது.
சிறையில் கலவரம் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய சிரிய மனித உரிமைகளுக்கான போர் கண்காணிப்பு அமைப்பு, கைதிகள் தப்பிச் சென்றார்களா என்பதை சரிபார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.
Comments