சரிவிலிருந்து மீண்டு வரும் அதானி குழுமம்.. நிறுவன பங்குகள் விற்பனை 20 சதவீதம் உயர்வு

தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த அதானி குழுமத்தின் பங்குகள் விற்பனை, இன்று 20 சதவீதம் வரையில் உயர்ந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பெர்க் வெளியிட்ட ஆய்வறிக்கைக்குப் பிறகு,
அதானி குழுமத்தின் பங்குகள் 1 வாரத்திற்கும் மேலாக கடும் வீழ்ச்சியை சந்தித்ததால், உலக பணக்காரர்கள் வரிசையில் 2ம் இடத்திலிருந்து 20வது இடத்திற்கும் கீழே கவுதம் அதானி தள்ளப்பட்டார்.
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்வுடன் வர்த்தகமானதாகவும், இதனால், 3 முறை விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி வில்மர் பங்குகள் தலா 5 சதவீதம் அதிகரித்த நிலையில், மாறாக அதானி கேஸ் பங்கின் விலை மேலும் 5 சதவீதம் சரிவை சந்தித்தது.
சுமார் 110 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன்களை முன்கூட்டியே திருப்பிச்செலுத்துவதாக அதானி வெளியிட்ட அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
Comments