"பட்ஜெட்டில் இருக்கும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்" - பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

மத்திய பட்ஜெட்டில் இருக்கும் திட்டங்கள் குறித்து நாட்டு மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென, பாஜக எம்.பிக்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் இருக்கும் திட்டங்கள் குறித்து நாட்டு மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென, பாஜக எம்.பிக்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்த பின் நடக்கும் பாஜகவின் முதல் எம்.பிக்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, ஏழைகளின் நலனை மையமாக கொண்டே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், ஒவ்வொரு எம்.பியும் தங்களது தொகுதிக்கு சென்று பட்ஜெட்டில் அவர்களுக்கான திட்டங்கள் என்னென்ன இருக்கிறது? என்பதை எடுத்துரைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Comments