துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் 4,300க்கும் மேற்பட்டோர் பலி..!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவின் மூத்த அதிகாரி கேத்ரின் ஸ்மால்வுட் கூறியுள்ளார்.
உலகளவில் அதிகம் நிலநடுக்கம் தாக்கும் மண்டலங்களில் ஒன்றாக துருக்கி அமைந்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Comments