வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் மனைவி மீட்கக்கோரி கணவர் மனு

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் மனைவியை மீட்டுத்தரக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பெண்ணின் கணவர் புகார் மனு அளித்துள்ளார்.
பேராயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமலையின் மனைவி சுமதி மஸ்கட்டுக்கு 4 மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் இருந்து வருவதாகவும், 10க்கும் மேற்பட்ட பெண்களை ஒரே அறையில் பூட்டி வைத்து அங்குள்ள ஏஜெண்ட் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் திருமலை குறிப்பிட்டுள்ளார்.
Comments