பெரிய கல்லை தூக்கி தாக்கிய திமுக கவுன்சிலர்..! ரொம்ப கோவக்காரரா இருப்பாரோ..!
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் இடத்தகராறில் பெரிய கல்லை எடுத்து இளைஞர் ஒருவர் மீது திமுக கவுன்சிலர் வீசி தாக்கியதாக சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி விஜயராகபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அவரது சகோதரருக்கு சொந்தமான பார்க்கிங் யார்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது பார்க்கிங் யார்டுக்கு அருகில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டு திமுக கவுன்சிலர் சேகர் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் குடோன் உள்ளது . இருவருக்குமிடையே இடத்தகராறு இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று கவுன்சிலர் சேகர் மற்றும் அவரது மருமகன் உள்ளிட்டோர் பார்க்கிங் யார்டுக்குள் நுழைந்து ராஜசேகர் மீது பெரிய அளவிலான கல்லைத் தூக்கிப் போட்டதாக கூறப்படுகின்றது.
அதில் லேசான காயத்துடன் தப்பியவரை விரட்டி விரட்டி தாக்கினார். பலத்த காயம் அடைந்த ராஜசேகர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அந்த பார்க்கிங் யார்டுக்கு செல்லும் வழியை மறிக்கும் விதமாக, சாலை நடுவில் குழியை தோண்டி தடுப்புகளை அமைத்ததாக அவர் மீது காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Comments