கொட்டும் பனிக்கு நடுவே கர்ப்பிணியை 5 கி.மீ. தூரம் தூக்கிச் சென்ற ராணுவ வீரர்கள்

காஷ்மீரில் கொட்டும் பனிக்கு நடுவே கர்ப்பிணி ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்றனர்.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள பதாகிட் என்ற கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவ உதவிக்காக காத்திருந்தார்.
இதனையறிந்த இந்திய ராணுவ வீரர்கள் சிலர், கர்ப்பிணியை கொட்டும் பனிக்கு நடுவே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Comments