மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம்.. அதிர்ச்சியில் கிராம மக்கள்..!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டிக்குள் நாயை கொன்று வீசிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுப்பேட்டை கிராமத்தில், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கடந்த 2 தினங்களாக தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்த நிலையில், இன்று தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய போது அழுகிய நிலையில் நாய் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் தொட்டிக்குள் நாயை அடித்து வீசியவர்கள் யார் என்பது குறித்து சிவகாசி டிஎஸ்பி தனஞ்செயன் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments