நீளமாக முடி இருந்தால் இதுதான் பிரச்சனை... ரக்கடு கேர்ள்ஸ் பைட்..!
கும்மிடிப்பூண்டி அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், வட மாநில பெண்களுடன் தலைமுடியை பிடித்து தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது
கும்மிடிப்பூண்டியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பிளாக் அண்ட் பிளாக் டி சர்ட் பேண்ட் அணிந்து வேலைப்பார்த்து வரும் பெண் ஊழியர்களுக்கும், முடியை கலரிங் செய்த வட மாநில பெண்களுக்கும் இடையே நடந்த மோதலின் உக்கிரமான காட்சிகள் தான் இவை..!
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வேலைப்பார்க்கும் வடமாநிலத்தவர்கள், தங்கள் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அழகு நிலையம் சென்ற இடத்தில் இரு தரப்பும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாகி, தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
தங்கள் அருகில் சின்னஞ்சிறுவன் இருப்பதை பற்றி கூட கவலைப்படாமல், தலைமுடியை பிடித்து இழுத்து தரையில் தள்ளித்தாக்குதல் நடத்தப்பட்டது.
சமாதானம் செய்ய சென்ற ஆண்கள், பெண்களின் ஹேர் கட் கராத்தேவை கண்டு கதிகலங்கிபோயினர்.
இந்த சம்பவம் தொடர்பாக புகார்கள் ஏதும் போலீசில் அளிக்கப்படாத நிலையில், இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Comments