32 கிராமி விருதுகளை வென்ற அமெரிக்க பாடகி பியான்சே.. ஹங்கேரியின் ஜார்ஜ் சோல்டி சாதனை முறியடிப்பு..!

அமெரிக்காவில் நடைபெற்ற 65வது கிராமி விருது வழங்கும் விழாவில் அமெரிக்க பாடகி பியான்சே 4 விருதுகளை வென்றதன் மூலம், அதிகமுறை இந்த விருதை வென்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இசைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், சிறந்த நடனம், எலக்ட்ரானிக் மியூசிக் ஆல்பம் பிரிவில் 41 வயதான பியான்சேவின் "Renaissance," என்ற ஆல்பம் 4 விருதுகளை தட்டிச் சென்றதால், அவரது மொத்த கிராமிய விருது எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.
இதன் மூலம், ஏற்கனவே 31 விருதுகள் வென்றிருந்த ஹங்கேரியின் ஜார்ஜ் சோல்டி சாதனையை பியான்சே முறியடித்தார்.
Comments