மாமூல் ரவுடி கலைக்கு மாறுகை... மாறுகால்... முறிந்ததால் மாவுக்கட்டு..! பட்டா கத்தி எடுத்தவரின் பரிதாபம்..!

0 1972

சென்னை வியாசர்பாடி பி.வி காலனியில் கையில் பட்டாக்கத்திகளுடன் பொதுமக்களை தாக்கி வாகனங்களை உடைத்து அட்டூழியம் செய்த மாமூல் ரவுடி ஒருவன், மாடியில் இருந்து குதித்து கை கால் முறிந்ததால் மாவுக்கட்டு போடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது

வட சென்னையில் இனி நாங்க தான்... என்ற தோரணையில் ரவுடி கலை என்கிற கலைச்செல்வன் தலைமையிலான மாமூல் ரவுடிக் கும்பல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைகளில் மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்டது.

மாமூல் பணம் தராதவர்களை பட்டாக்கத்தியால் வெட்டியதோடு டாடா ஏஸ், கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை கத்தியால் வெட்டி சேதப்படுத்தி வியாசர்பாடி தங்கள் கண்ட்ரோலில் இருப்பதாக சினிமா பாணியில் ஜம்பம் அடித்தனர்

இத்தோடு நிற்காமல், அண்ணா நகர், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த மாமூல் ரவுடிக்கும்பலின் அட்டகாசத்தால் வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் அச்சத்துக்குள்ளாயினர். இந்த நிலையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் வில்லிவாக்கம் வழக்கறிஞர் ராஜேஷ் கொலை வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்று விட்டு ஜாமீனில் வெளியே வந்த கஞ்சா குடிக்கிகள் புதிதாக ரவுடிகளாக வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் ஒவ்வொருவராக போலீஸ் பிடியில் சிக்கினாலும் இந்த மாமூல் கும்பலின் லீடர் என்று கருதப்பட்ட கலை என்கிற கலைச்செல்வன் மட்டும் போலீஸ் பிடியில் சிக்காமல் போலீசுக்கு போக்கு காட்டி வந்தான்.

சம்பவத்தன்று ஒரு வீட்டு மொட்டை மாடியில் பதுங்கி இருந்த ரவுடி கலையை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர்... போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மாடியில் இருந்து குதித்த கலைக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவரை கருணை உள்ளத்தோடு தூக்கிச்சென்று கையிலும் காலிலும் மாவுகட்டுப் போட்டு விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

கலைச்செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவனை புழல் சிறையில் அடைத்தனர்.

கையில் கத்தியுடன் பொது மக்களுக்கு இடையூறு செய்ய துணிந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கூட்டாளிகள் துணையிருக்கும் தைரியத்தில் கத்தியுடன் கும்பலாக அட்டகாசம் செய்தால், இப்படித்தான் சிங்கிளாக சிறையில் தவிக்கும் நிலை ஏற்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments