குளிர்பான கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற வடமாநில இளைஞருக்கு தர்ம அடி..!
சென்னை மாதவரத்தில் பட்டப்பகலில் குளிர்பான கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற வடமாநில இளைஞரை, அக்கம்பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவன் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதும், அவனது பெயர் துக்கான் என்பதும் தெரியவந்தது. வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் அவன் ஈடுபட்டுள்ளானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments